version française / பிரஞ்சு மொழியில்

logo
 



ஏனைய செயற்பாடுகள்

 







_____________________________________






_____________________________________






_____________________________________






_____________________________________






_____________________________________






_____________________________________





_____________________________________





_____________________________________




ஓங்கு புகழ் தீந்தமிழாள் பெருமையுடன் பெற்றமகன்

  ஒப்பில்லாத் தலைவன் தன் பணி சிறக்க- தளை

நீங்கியெழு மறவர் கை ஓங்கி நிற்க வேண்டுமென

  நேரிய சிந்தையோடு வந்தணைந்தாய் எம்மை

பாங்காய் நற்பண்புகளை உன்னகத்தே யுடைத்து

   பல செயலும் வகுத்துன் உயிர் கொடுத்த மேலோனே

ஊங்கணோர் வளர்த்த செழுந்தமிழ்த் தாயை

   ஊறிலாது கண்ணாய்க் காத்திட நடை நடந்தாய்

ஈங்கெம் தமிழன்னை வளம் கூட்டி நலம் பெருக்கி

   ஈடேற்றம் பெறப் பல வழி சமைத்துக் கொடுத்திட்டாய்

தேங்கா துன் கனவுகள் அணையிட்ட கட்டுள் - நின்

   தாளடியில் அணிவிக்கிறோம் தமிழ்ச்சோலை

                                இணையமதை.


_____________________________________





இருப்பென்பது உன்
வாழ்வின் வழியிலிருந்தது
உன் ஒழுக்க முறைமையின் நீரூற்று
வழியெங்கும் பெருகியோடியது
கட்டுக்கடங்காது பாய்ந்து வரும்
நதிப் பெருக் குன்
எண்ணப் பெருக்கின் முன்
தடங்கலுற்று நின்றது
கட்டிட வியலாக் காற்றாய்
ஆவியுள் புகுந்த இலக்கு
சுழன்று செயலாய் வடிவெடுத்தாடியது
ஒன்றா இரண்டா வகைப்படுத்த
ஓயாத நின் பணிச் சிறப்பை
ஒறுத்தாய் ஊணும் உறக்கமும்
ஒல்லாருக்கு தொடர் கனவு ஆனாய்
நிதானமெனும் உன் ஆயுதத்தால்
நிறுத்தி வைத்தாய் நல்லுறவுகளை
கண்ணொளி வீச்சின் காத்திரம்
ஆளணிகளை கணக்கின்றி
வசப்படுத்தி அருகமர்த்தியது
புன்னகைப் பொதிக்குள் புதைந்திருந்த நட்புப் பூ
இயல்பாய் இலக்கு நோக்கி நகர்த்தியிருந்தது
வார்த்தைகள் வாழ்வின் தொடர்பாய்
வெளி விழுந்து உள்நோக்கி
இழுக்கத் தொடங்கியிருந்த காலமதில்
அசைவு நிறுத்தி உலுப்பி விட்டு
அமைதியாகப் போயிருந்தாய்
நினைவுகளும் அதன் கணங்களுமே
மிச்சமாய்த் தொடருவதை அறிந்தபடி...



_____________________________________








_____________________________________





_____________________________________





_____________________________________


தமிழ்ச்சோலை நிகழ்வுகள்

 

தமிழ்ச்சோலைக் கீதம்

 

 

>எழுத்து வடிவம்

தமிழ்மொழி வாழ்த்து

>எழுத்து வடிவம்

 
 
 



logo

 

 










165 bd de la Villette


75010 Paris


    Stalingrad










பணியகம் திறந்திருக்கும்


நேரம்






புதன்கிழமை தொடக்கம்


ஞாயிற்றுக்கிழமை வரை




14 மணி 30 தொடக்கம்


19 மணி 30 வரை











  தொடர்புகளுக்கு




  tamoulcholai@yahoo.fr



  09 84 06 38 83