version française / பிரஞ்சு மொழியில்
|
|
2014 |
-> ஒளிப்படத்தொகுப்பு
நான்காவது தடவையாக பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறையின்சார்ந்தொழுகலுடன் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகமும் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடாத்திய இல்லங்களிற்கிடையேயான மெய்வல்லுனர்ப் போட்டி 27/06/2014ஞாயிற்றுக்கிழமை CENTRE SPORTIF NELSON MANDELA , PAUL LANGEVIN 95200 SARCELLES என்னுமிடத்தில் நடைபெற்றது. ஆயிரத்துநானூறு மாணவர்கள் இப்போட்டியில் பங்குபற்றியிருந்தனர். தமிழ்ச்சோலை மாணவர்களின் முழவு இசை அணிவகுப்புடன் விருந்தினர்கள் விளையாட்டுத்திடலுக்கு அழைத்து வரப்பட்டனர். தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் நிர்வாகப் பொறுப்பாளர் திரு. சத்தியதாசன் ஆசிரியர் அவர்களால் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினர் பாராளுமன்ற உறுப்பினரும், சார்சல் மாநகர முதல்வருமாகிய François Pupponi அவர்களால் பிரெஞ்சுக்கொடியும், தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி. சுபாஸ்கரன் சுகந்தினி அவர்களால் தமிழீழத்தேசியக்கொடியும் ஏற்றி வைக்கப்பட்டது.
வீரவேங்கை லெப்.வெற்றியின் சகோதரி அவர்களால் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டபின் தமிழ்ச்சோலைக் கீதத்துடன் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமாரன் அவர்கள் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகக் கொடியை ஏற்றி வைக்க, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு.ப.பாலசுந்தரம் அவர்கள் தமிழ்ச் சங்கங்களின் கொடியை ஏற்றி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து ராதா இல்லத்தலைவர் திரு. நாககேதீஸ்வரன்,மாலதி இல்லத்தலைவர் திரு.தேவராஜா சோதியா இல்லத்தலைவர் திரு.சச்சிதானந்தம், அங்கயற்கண்ணி இல்லத்தலைவி திருமதி.ரஜனி,ஜெயந்தன் இல்லத்தலைவி திருமதி.கலைவாணி, சாள்ஸ் அன்ரனி இல்லத்தலைவர் திரு.மனோகரன் ஆகியோர் ஒரே நேரத்தில் இல்லக்கொடிகளை ஏற்றி வைத்தனர்,
தொடர்ந்து மெய்வல்லுனர்ப்போட்டி முகாமையாளர் திரு.இராஜலிங்கம் அவர்கள் ஒலிம்பிக் சுடர் ஏற்றும் நிகழ்வினை ஆரம்பித்து வைக்க அதனை 2013 ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரனாகத் தெரிவு செய்யப்பட்ட செல்வன்.திலீப்குமார் சுபன், சிறந்த விளையாட்டு வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்ட செல்வி.சோதிராசா சோபியா அவர்களும் பெற்றுக் கொண்டு இல்ல விளையாட்டு வீரர்களிடம் கையளிக்கப்பட்டு உறுதிப்பிரமாணம் எடுக்கப்பட்டது.
பிரதம விருந்தினரின் உரையைத் தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்புடன் போட்டிகள் ஆரம்பமாகின.வழமையான போட்டி நிகழ்வுகளுடன், சிறுவர்களுக்கான போட்டிகள், பழைய மாணவர்களுக்கான போட்டிகள்,மாறுவேடப் போட்டிகள்,பார்வையாளர்களுக்கான போட்டிகள் போன்றனவும் இடம் பெற்றன.
வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள், பதக்கங்கள், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. போட்டியில் சாள்ஸ் அன்ரனி இல்லம் முதலாவது இடத்தையும்,ராதா இல்லம் இரண்டாவது இடத்தையும், அங்கயற்கண்ணி இல்லம் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.
காலநிலை சீரற்று இருந்தபோதிலும் மாணவர்கள் மிகவும் உற்சாகமாகப் போட்டிகளில் பங்கு பற்றியிருந்ததும், தமிழ்ச்சோலைப் பழைய மாணவர்கள் பலர் இந்நிகழ்வில் பங்குபற்றிச் சிறப்பித்திருந்ததும், இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
பங்குபற்றிய இல்லங்களும் புள்ளிகளும்
சாள்ஸ் இல்லம் 376,5
ராதாஇல்லம் 359
அங்கயற்கண்ணி இல்லம் 283
ஜெயந்தன் 222
சோதியா இல்லம் 197,5
மாலதி இல்லம் 105 (மேலும்)
|
2013 |
-> ஒளிப்படத்தொகுப்பு
பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறையின் சார்ந்தொழுகலுடன் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகமும் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடாத்திய இல்லங்களிற்கிடையேயான மெய்வல்லுனர் போட்டி 23.05.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது . ஆயிரக்கணக்கான மாணவர்கள் இப்போட்டியில் பங்குபற்றியிருந்தனர் .
கொடியேற்ற நிகழ்வுகளுடன் ஆரம்பமாகிய நிகழ்வுகள் 2012ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்களாகத் தெரிவு செய்யப்பட்ட செல்வன்.திலீப்குமார் சுதன்,செல்வி.அனோஜா கோகுலதாஸ் ஆகியோரினால்மைதானத்தைச் சுற்றி எடுத்து வரப்பட்ட வெற்றிச்சுடர் அனைத்து இல்லவிளையாட்டு வீரர்களுடன் ஏற்றப்பட்டபின் சத்தியப்பிரமாணம் எடுக்கப்பட்டது.
முதல் தடவையாக முழவு இசை முழக்கத்துடன் இல்லங்களிற்கிடையேயான அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது .சுவட்டு மைதான நிகழ்வுகளுடன் சிறுவர்களுக்கான நிகழ்வுகள் ,பார்வையாளர்களுக்கான நிகழ்வுகள்,மாறுவேட உடைப்போட்டிகள் என்பன, இடம் பெற்றிருந்தன .
வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் ,பதக்கங்களும் வழங்கப்பட்டன .இல்லஅலங்காரங்களிற்கான போட்டியில் சாள்ஸ் இல்லம் முதலாம் இடத்தையும் ,சோதியா இல்லம் ,ராதா இல்லம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன .
பங்குபற்றிய இல்லங்களும் புள்ளிகளும்
ராதாஇல்லம் 197
அங்கயற்கண்ணி இல்லம் 189
சோதியா இல்லம் 188
சாள்ஸ் இல்லம் 164
மாலதி இல்லம் 30. (மேலும்)
|
|
தமிழ்ச்சோலை நிகழ்வுகள் |
|
|
|
|
|
|
|
|
|
|
165 bd de la Villette
75010 Paris
Stalingrad
|
பணியகம் திறந்திருக்கும்
நேரம்
புதன்கிழமை தொடக்கம்
ஞாயிற்றுக்கிழமை வரை
14 மணி 30 தொடக்கம்
19 மணி 30 வரை
|
தொடர்புகளுக்கு
tamoulcholai@yahoo.fr
09 84 06 38 83
|
|
|