version française / பிரஞ்சு மொழியில்

logo
 



ஆளுகை
>எம்மைப்பற்றி

     இலங்கையில் சிறிலங்கா பௌத்த சிங்கள பேரினக்கோட்பாடு மிகக் கொடுமையான அடக்குமுறைகளை ஈழத்தமிழர்கள் மீது கட்டவிழ்க்க தமிழ்த் தேசியப் போராட்டம் மிகக் கூர்மையாக வலுவடைந்தது. இந்நிலையில் இலக்கக் கணக்கான மக்கள் புலம் பெயர்ந்து உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

     இப்புலப்பெயர்வானது அந்தந்த நாட்டுக் குமுக ,பொருளியல் ,அரசியல் சூழ் நிலைகளிற்கேற்ப நம்மை மாற்ற வேண்டிய தேவையை உருவாக்கியது. புலம் பெயர்ந்து அந்தந்த நாட்டுக் குடியுரிமையுடன் வாழ்ந்து வரும் நம்மவர்கள் நம் தலை முறையினருக்கு நம் உயிர்ப்பின் இருப்பான தமிழ் மொழியை முழுமையாகக் கொடுத்து நம் அடையாளத்தை உணர வைக்க வேண்டிய பாரிய பொறுப்பை நாம் கொண்டுள்ளோம். புலப்பெயர் வாழ்வில் நம் இளம் தலைமுறையினர் தடம் மாறாதிருக்க நம் தாய்மொழிக் கல்வியூடாக நம் பண்பாட்டு விழுமியங்களையும் உணர வைக்க வேண்டிய கடமைப் பாட்டினையும் நாம் கொண்டுள்ளோம் .

     இவ்வகையில் பிரெஞ்சு மண்ணில் நம் தலைமுறையினருக்கு தாய்மொழியாம் தமிழ் மொழியைக் கற்பிக்கும் மேன்மையான பணியை நோக்காகக் கொண்டு உருவாக்கப் பட்டதே "தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் "ஆகும். 11.11.1998 அன்று ஆரம்பிக்கப்பட்ட தமிழ்சோலைத் தலைமைப் பணியகம் தன் பணியைச் செவ்வனே செயலாற்றி வருகிறது. இன்று நாடளாவிய வகையில் 5000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ்மொழியையும் தமிழ்க்கலைகளையும் கற்றுப் பயன்பெறும் அறிவுக்களஞ்சியமாக விளங்கும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகமானது 63 பள்ளிகளையும் 350ற்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும் தன்னகத்தே கொண்டு மிகத் திறம்படச் செயலாற்றி வருகிறது .

     சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியப்பயிற்றுனர்களினால் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான செயலமர்வுகளின் மூலம் ஆசிரியர்கள் மேலும் பயிற்சி பெற்று தம் பணியினைத் திறம்பட நடாத்தி வருகின்றனர். இதற்குத் தன்னார்வத் தொண்டர்களின் ஈடிணையற்ற சேவை வலுச்சேர்த்து நிற்பது குறிப்பிடத்தக்கதாகும் .இத்துடன் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் ஆண்டு 12 நிறைவு செய்த நம் இளம் தலைமுறையினரால் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆசிரியப்பணி நம் குறிக்கோளின் வெற்றிக்குரிய முதற்படி ஆகும்.

      மாணவர்களை உற்சாகமூட்டும் வகையில் அவர்களின் பேச்சாற்றலை வளர்க்கும் முகமாக தமிழ்ச்சோலைப் பள்ளிகளினூடாகத் திருக்குறள் மனனப் போட்டிகளையும் ஆண்டுதோறும் நடாத்தி வருகிறது.

      இத்துடன் உடல் உள வளத்தினை நோக்காகக் கொண்டு ஆண்டுதோறும் இல்ல விளையாட்டுப் போட்டிகளும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டு வருகிறது.

                                "தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
                               காமுறுவர் கற்றறிந் தார் "


என்பதற்கிணங்க இவ்வின்பத்தால் பெருமை கொண்டு நிற்கிறது தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்.

"நம் வாழ்வும் வளமும் தமிழ்மொழி என்போம் "

 

தமிழ்ச்சோலை நிகழ்வுகள்

 

தமிழ்ச்சோலைக் கீதம்

 

 

>எழுத்து வடிவம்

தமிழ்மொழி வாழ்த்து

>எழுத்து வடிவம்

 
 
 



logo

 

 










165 bd de la Villette


75010 Paris


    Stalingrad










பணியகம் திறந்திருக்கும்


நேரம்






புதன்கிழமை தொடக்கம்


ஞாயிற்றுக்கிழமை வரை




14 மணி 30 தொடக்கம்


19 மணி 30 வரை











  தொடர்புகளுக்கு




  tamoulcholai@yahoo.fr



  09 84 06 38 83