version française / பிரஞ்சு மொழியில்

logo
 
ஆளுகை > கல்வித்திட்டம்

1 - தொடக்கக் கல்வி
2 - உயர்கல்வி
3 - பட்டக்கல்வி
4 - தமிழ்க்கலைகள்


தொடக்கக் கல்வி


விளத்தம்


கூறு - 1

மழலைத் தமிழ்
சிறுவர் பாடல்கள், நிறப்பிரிப்பு விளையாட்டுகள், எண்ணுதல், ஒழுங்குபடுத்தல், பலுக்கல், சொல்லுவதைப் புரிதல், இலகு உரையாடல், இலகு எழுத்துகள் அறிமுகம், உளவியல் விளையாட்டுகள்.


கூறு - 2

சிறு சொல்லிய அமைப்பு
கேட்டல், உள்வாங்கல், திருப்பிச் சொல்லல், எழுத்து அறிமுகம், ஒருமை - பன்மை, ஆண்பால் - பெண்பால் அறிமுகம், சின்னஞ்சிறு கதைகள், எண்ணுதல், உளவியல் விளையாட்டுக்கள்.


கூறு - 3

தொடக்க இலக்கிய இலக்கணம்
வாசிப்பு, தெளிவாக உரையாடல், தொடக்க இலக்கணம், இலக்கியம், சொல்வதெழுதுதல், உளவியற் செயற்பாடுகள்.


கூறு - 4

உயர் இலக்கிய இலக்கணம்
நடுநிலையான, இயல்பான நிலையில் மொழியறிவு, மொழிபெயர்ப்பு, உயர் இலக்கணம்-இலக்கியம், தாமகவே அகராதிகள் துணைநூல்கள் பயன்படுத்தல், சொந்த ஆக்கங்கள்.





உயர்கல்வி

கூறு - 5

இறுதியாண்டுக் கல்வி

கூறு - 6

முறைசார் உயர்கல்வி தமிழ்மொழித் தேர்வு
(BAC)
 





பட்டக்கல்வி

கூறு - 7
தமிழ் இணையக் கல்விக்கழகத்தினூடாக கலைமாணிப் பட்டப்படிப்பு

  மேலும் தகவல் பெற



தமிழ்க்கலைகள்


கூறு - 8


நடனம், வாய்ப்பாட்டு, தண்ணுமை, வீணை, வயலின், சுரத்தட்டு



     நான்கு அகவை முதல் எமது சிறார்கள் தொடக்கக் கல்வியில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள். இது மழலையர் நிலை எனப்படும். இங்கே சிறார்கள் நிறப்பிரிப்பு, எண்கள், ஒழுங்குபடுத்துதல் போன்ற செயற்பாட்டு வளர்ச்சிகளுடன் அதற்கு அடுத்த நிலையான சிறுவர் நிலைக்கு வருகின்றனர். இங்கே பல்வேறு செயற்பாடுகளுடன் எழுத்துக்களையும் குழந்தைகள் அறிந்து கொள்ளுகின்றனர். இதன் பின்னர் சிறார்கள் முழுமையாக வளர் தமிழ் ஒன்றிலிருந்து வளர்தமிழ் பன்னிரண்டு வரை தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் கல்வித் திட்டத்திற்கமைய , தமிழ் மொழியூடாக இலக்கியம், இலக்கணம், வரலாறு போன்றவற்றைக் கற்கிறார்கள்.

    இதனடிப்படையில் ஆண்டுதோறும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் ஒழுங்கு செய்யப்படும் அனைத்துலகத் தமிழ் மொழித் தேர்வானது, வாய்மொழித் தேர்வாகவும் (கேட்டல், பேசுதல், வாசித்தல்) எழுத்துமொழித் தேர்வாகவும் இரண்டு பகுதிகளாக நடைபெறுகிறது. இத் தேர்வுகளில் எமது மாணவர்கள் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று வருகிறார்கள்.

     மேலும் பிரெஞ்சுக் கல்வித் திட்டத்திற்கேற்ப, உயர்கல்வி இறுதி ஆண்டு தமிழ் மொழித் தெரிவுத் தேர்வில் (Baccalauréat) தேர்ச்சி பெற நம் பிள்ளைகளைத் தயார்ப்படுத்துகிறோம்.

    இத்துடன் பிரான்சு நாட்டில் தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம் தமிழ் இணையக் கல்விக் கழகத்தினூடாக தமிழ்க் கலைமாணிப் பட்டப் படிப்பினை அறிமுகம் செய்துள்ளது . வயது வேறுபாடின்றி அனைவரும் பட்டப்படிப்பினை மேற்கொள்ளலாம் . தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் ஆண்டு 12 சித்தியடைந்தவர்கள் நுழைவுத்தேர்வு (Entrance Exam) செய்த பின் பட்டப்படிப்பினை மேற்கொள்ளலாம் . தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின், பாடத்திட்டம் தயாரித்தல் ,கற்கை நெறிகளின் மேற்பார்வை ,தேர்வுகள் ,சான்றிதழ் வழங்குதல் என்பன யாவுமே இந்தியாவின் பிரபல பல்கலைக்கழகங்களுள் ஒன்றான தஞ்சாவூர்ப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுகின்றன. தற்பொழுது ஐம்பதுக்கு மேற்பட்டோர் பட்டப் படிப்பினை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தமிழ்ச்சோலைப் பள்ளிகளில், தமிழ்க் கலைகளில் சிறப்புப் பயிற்சியும் பட்டறிவும் பெற்ற ஆசிரியர்களால், நடனம், வாய்ப்பாட்டு, தண்ணுமை, வயலின், வீணை, சுரத்தட்டு போன்ற தமிழ்க் கலைகள் கற்பிக்கப்படுகின்றன. மேலும் தமிழ்க் கலைத்தேர்வுகள் தமிழ்க் கலை நிறுவகத்தால் எழுத்துத் தேர்வு, செயற்திறன் தேர்வு என இரண்டு பிரிவுகளாக நடாத்தப் பட்டு வருகின்றது.

 

தமிழ்ச்சோலை நிகழ்வுகள்

 

தமிழ்ச்சோலைக் கீதம்

 

 

>எழுத்து வடிவம்

தமிழ்மொழி வாழ்த்து

>எழுத்து வடிவம்

 
 
 



logo

 

 










165 bd de la Villette


75010 Paris


    Stalingrad










பணியகம் திறந்திருக்கும்


நேரம்






புதன்கிழமை தொடக்கம்


ஞாயிற்றுக்கிழமை வரை




14 மணி 30 தொடக்கம்


19 மணி 30 வரை











  தொடர்புகளுக்கு




  tamoulcholai@yahoo.fr



  09 84 06 38 83