2018 |
-> ஒளிப்படத்தொகுப்பு |
2017 |
-> ஒளிப்படத்தொகுப்பு |
2016 |
-> ஒளிப்படத்தொகுப்பு
முத்தமிழ் விழா 2016
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அனைத்துத் பள்ளிகளையும் இணைத்து நடாத்திய 18வது முத்தமிழ் விழா இவ்வாண்டு SAVIGNY LE TEMPLE (77) என்னும் இடத்தில் அமைந்துள்ள "Millenaire " என்ற பிரமாண்டமான அரங்கில் நடைபெற்றது
நிகழ்வுகள் யாவும் குறித்த நேரமாகிய 11 மணிக்கே ஆரம்பமாகின.பிரதம விருந்தினராக வருகை
தந்திருந்த SAVIGNY LE TEMPLE நகர முதல்வர் Mme.Marie-Line Pichery,உதவி நகர முதல்வர்கள்,ஜேர்மனியிலிருந்து வருகை தந்திருந்த திரு.மார்க்கண்டு பாஸ்கரமுர்த்தி மற்றும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுச் செயற்பாட்டாளர்கள், தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் இன்னியத்துடன் மண்டபத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரான்சு நாடாளுமன்ற உதவித்தலைவர் Mr Olivier Faure கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிரதமவிருந்தினர், சிறப்பு விருந்தினர் மங்கல விளக்கினை ஏற்றி வைக்க, அக வணக்கத்தினைத் தொடர்ந்து
தமிழ்ச்சோலைக் கீதத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகச் செயலாளர் திரு.காணிக்கைநாதன் அவர்களால் வழங்கப்பட்ட வரவேற்புரையைத் தொடர்ந்து, வரவேற்பு நடனமும் ,அவற்றைத் தொடர்ந்து நாடகம், பரத நடனம் , எழுச்சி நடனம் , இசை நிகழ்வுகள் போன்ற முத்தமிழும் இவ்வரங்கில் இடம் பெற்றன .
வழமை போன்று வளர்தமிழ் 12 நிறைவு செய்து தேர்ச்சியில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் ,திருக்குறள் திறன் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன .இத்துடன் இணையப் பல்கலைக்கழக மாணவர்களும் அரங்கில் சிறப்பிக்கப்பட்டனர்
மேலும், தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் பத்து ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த ஆசிரியர்களும் கேடயங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
தமிழ்ச்சோலை ஆண்டுவிழா மலர் வெளியிட்டு வைக்கப் பட்டதுடன் , நிகழ்வில் கலந்து சிறப்பித்த பிரதமவிருந்தினர்கள் , சிறப்பு விருந்தினர்கள் பொன்னாடை போற்றிக் கௌரவிக்கப்பட்டனர்.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகச் செயற்பாட்டாளர் திரு. அகிலன் அவர்களின் நன்றியுரையைத் தொடர்ந்து நல்வாய்ப்புச் சீட்டிழுப்பு நடைபெற்ற பின், தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெற்றது .இறுதியாக "நம்புங்கள் தமிழீழம் நாளை மலரும்"என்ற பாடலுடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவு பெற்றது
(மேலும்)
|
2015 |
-> ஒளிப்படத்தொகுப்பு
முத்தமிழ் விழா 2015
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளையும் இணைத்து நடாத்தும் 17வது முத்தமிழ் விழா இவ்வாண்டு SAVIGNY LE TEMPLE (77) என்னும் இடத்தில் அமைந்துள்ள "Millenaire " என்ற பிரமாண்டமான அரங்கில் நடைபெற்றது.
நிகழ்வுகள் யாவும் குறித்த நேரமாகிய 11 மணிக்கே ஆரம்பமாகின.பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த SAVIGNY LE TEMPLE நகர முதல்வர் Mme.Marie-Line Pichery,உதவி நகர முதல்வர்கள்,தமிழகத்திலிருந்து வருகை தந்த பேராசிரியர் திரு.கல்யாணசுந்தரம் ,பேராசிரியர் திரு .அரசேந்திரன், பிரெஞ்சு உயர்தரத் தமிழ்த்தேர்வுப் பொறுப்பாளர் முனைவர் திரு. முடியப்பநாதன், Guadeloupe லிருந்து வருகை தந்த திரு.நாராயணசுவாமி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இன்னியத்துடன் மண்டபத்தினுள் அழைத்து வரப்பட்டனர்
பிரதமவிருந்தினர், சிறப்பு விருந்தினர் மங்கல விளக்கினை ஏற்றி வைக்க, அக வணக்கத்தினைத் தொடர்ந்து
தமிழ்ச்சோலைக் கீதத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகச் செயற்பாட்டாளர் திரு.தனராஜா அவர்களால் வழங்கப்பட்ட வரவேற்புரையைத் தொடர்ந்து, வரவேற்பு நடனமும் ,அவற்றைத் தொடர்ந்து பழந்தமிழ்க் கலைகளான கூத்து, வில்லுப்பாட்டு போன்றவற்றுடன் நாடகம், பரத நடனம் , எழுச்சி நடனம் , இசை நிகழ்வுகள் போன்ற முத்தமிழும் இவ்வரங்கில் இடம் பெற்றன .
வழமை போன்று வளர்தமிழ் 12 நிறைவு செய்து தேர்ச்சியில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் ,திருக்குறள் மனனப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன .இத்துடன் இணையப் பல்கலைக்கழக மாணவர்களும் அரங்கில் சிறப்பிக்கப்பட்டனர் .(தமிழகத்தில் நடைபெற்ற இயற்கை அனர்த்தங்களினால் அவர்களுக்குரிய சான்றிதழ்கள் கிடைக்கப் பெறவில்லை)
மேலும், தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் பத்து ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த ஆசிரியர்களும் , 2014 அனைத்துலகக் கலைத்தேர்வில் ஐரோப்பிய ரீதியில் அதிகூடிய மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களும்,ஐரோப்பிய ரீதியில் நடைபெற்ற தமிழ்க்கலைத்தேர்வில் ஆசிரியர் தரத்தினை நிறைவு செய்து சித்தியடைந்தவர்களும் கேடயங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
தமிழ்ச்சோலை ஆண்டுவிழா மலரினை ,பேராசிரியர் திரு .அரசேந்திரன் அவர்கள் வெளியிட்டு வைக்க முதல் மலரினை Guadeloupe இலிருந்து வருகை தந்த திரு.நாராயணசுவாமி அவர்கள் பெற்றுக் கொண்டார் .நிகழ்வில் கலந்து சிறப்பித்த பிரதமவிருந்தினர்கள் , சிறப்பு விருந்தினர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகச் செயற்பாட்டாளர் திரு. டக்ளஸ் அவர்களின் நன்றியுரையைத் தொடர்ந்து நல்வாய்ப்புச் சீட்டிழுப்பு நடைபெற்ற பின், தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெற்றது .இறுதியாக "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்"என்ற பாடலுடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன. (மேலும்)
|
2013 |
-> ஒளிப்படத்தொகுப்பு
முத்தமிழ் விழா 2013
பிரெஞ்சு மண்ணில் வாழும் நம் இளம்சிறார்களுக்குத் தாய்மொழியாம் தமிழ்மொழியை க் கற்பிக்கும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ச்சோலைப் பள்ளிகளை ஒருங்கிணைத்து , இப் பள்ளிகளை ஒரே சீராகவும், கட்டுக் கோப்புடனும் வழிநடத்திச் செல்கிறது தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் ஆண்டு தோறும் அனைத்துப் பள்ளிகளையும் இணைத்து முத்தமிழ் விழா கொண்டாடி வருவது அனைவரும் அறிந்ததே. இவ்வாண்டு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தன் பதினைந்தாவது ஆண்டு நிறைவு விழாவினை 29.12.2013 அன்று ஞாயிற்றுக்கிழமை LE GYMNASE PIERRE SCOHY, 1 ARISTIDE BRIAND, 93600 AULNAY S/B என்னும் இடத்தில் பெருமையுடன் கொண்டாடியது.
குறித்த நேரமாகிய 11 மணிக்கு சிறப்பு விருந்தினர்களையும்,,உபஅமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் எமது பாரம்பரிய இசை வடிவமான இன்னியத்துடன் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினர் விழா மண்டபத்தினுள் அழைத்து வந்தனர்.
சிறப்பு விருந்தினராக டென்மார்க்கிலிருந்து வருகை தந்திருந்த திரு, பொன்னம்பலம் மகேஸ்வரன் அவர்களும், பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர் திரு ப, பாலசுந்தரம் அவர்களும் மங்கல விளக்கினை ஏற்றி வைத்தனர். அகவணக்கத்தினைத் தொடர்ந்து தமிழ்க்சோலைக்கீதம் வழங்கப்பட்டபின், தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகச் செயற்பாட்டாளர் திரு.சிவஞானம் தனராஜா அவர்களால் வரவேற்புரை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்ச்சோலைப் பள்ளி மாணவர்களின் நிகழ்வுகள் ஆரம்பமாகின. மாணவர்கள் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் ஒரே அரங்கில் தந்திருந்தனர் , பரதநாட்டியங்கள் , எழுச்சிநடனங்கள் , எமது மரபுவழி நடனங்களான கோலாட்டம் , கும்மி போன்ற நடனங்களும் , கவிதை , பேச்சு, நாடகம் , பட்டிமன்றம் , சங்கீதம் , வாத்திய இசை போன்ற நிகழ்வுகளும் எமது மரபுவழிக் கலையான வில்லிசையும் இடம் பெற்றன. சிலப்பதிகாரக் கதையை நாட்டிய நாடகம் மூலம் மிக அருமையாக வழங்கியிருந்தனர். அநேகமான நிகழ்வுகள் தாயக நினைவுகளையும் , தாய்மொழியின் பெருமைகளையும் சுமந்தே அமைந்திருந்தன.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் பதினைந்து ஆண்டுகால சேவையில் அதன் வளர்ச்சி,, செயற்பாடுகள் பற்றிய விவரணப்படம் ஒன்றும் காண்பிக்கப்பட்டது . மேலும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் பதினைந்தாவது ஆண்டுவிழா மலரினை சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த திரு . பொன்னம்பலம் மகேஸ்வரன் அவர்கள் வெளியிட்டு வைக்க முதலாவது மலரினை பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர் திரு ப .பாலசுந்தரம் அவர்கள் பெற்றுக்கொண்டபின் தொடர்ந்து அனைத்துப் பாடசாலை நிர்வாகிகளும் பெற்றுக் கொண்டனர். சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த திரு, பொன்னம்பலம் மகேஸ்வரன் அவர்கள் பத்து ஆண்டுகள் , இருபது ஆண்டுகள் ஆசிரியச்சேவையை நிறைவு செய்த ஆசிரியர்களைப் பாராட்டி மதிப்பளித்து, சிறப்புரை ஒன்றினையும் வழங்கியிருந்தார். இவர் தனது உரையில் தமிழ்ச்சோலை வளர்ச்சிக்காகப் பாடுபடும் அனைவரையும் வாழ்த்தியதுடன் இன்றைய சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இத்துடன் திருக்குறள் திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வெற்றிக் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை இணைப்பாளர் திருமதி. அரியரட்ணம் நகுலேசுவரி அவர்களும் , திணைக்களமட்டத்தில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகிய மாணவர்களுக்கான பதக்கங்களையும், சான்றிதழ்களையும் தமிழர் ஒருங்கமைப்புக் குழுவின் செயற்பாட்டாளர் திரு. சத்தியதாசன் அவர்களும் வழங்கி மதிப்பளித்தனர் . கல்வி மேம்பாட்டுப்பேரவை இணைப்பாளர் திருமதி. அரியறட்ணம் நகுலேசுவரி , தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்செயற்பாட்டாளர் திரு.சத்தியதாசன் ஆகியோரும் சுருக்கமாகத் தம் உரையினைத் தந்திருந்தனர்.
ஆண்டு 12 சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ்களைத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு, ஜெயக்குமாரன் அவர்களும், இணையப் பல்கலைக் கழக நுழைவுத் தேர்வில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ்களை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்களும் வழங்கி மதிப்பளித்தனர்.
இறுதியாக தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினாரால் ஏற்பாடு செய்யப்பட்ட நல்வாய்ப்புச் சீட்டிழுப்பும் அதற்கான பரிசில்கள் வழங்கலும் இடம்பெற்ற பின், தமிழ்மொழி வாழ்த்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன. (மேலும்)
|
2012 |
-> ஒளிப்படத்தொகுப்பு
28/12/2012 ஞாயிறு பதினான்காவது முத்தமிழ் விழா பாரிசு (paris )புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள aulnay sous bois என்னும் இடத்தில் நடைபெற்றது .இன்னியம் ஒலிக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
நடனம் ,நாடகம் ,இன்னிசை ,வில்லுப்பாட்டு ,தாளலயம் போன்ற பல கலை நிகழ்வுகள் அனைத்துத் தமிழ்ச்சோலைப் பள்ளி மாணவ மாணவியர்களால் வழங்கப்பட்டன .
10 ஆண்டுகள் தங்கள் சேவையை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும் , வளர்தமிழ் 12 நிறைவு செய்த மாணவர்களுக்கான கௌரவிப்பும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினரால் வழங்கப்பட்டன . திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன . தமிழ்ச் சோலைக் கீதத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வுகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே நிறைவு பெற்றது. (மேலும்)
|
|
தமிழ்ச்சோலை நிகழ்வுகள் |
|
|