புலம் பெயர்ந்த மண்ணில் பிறந்து வளர்ந்து வரும் நம் தலைமுறையினர் தமிழ்மொழியூடாகத் தம் அடையாளத்தை உணர வைத்தல்.
அறிவியல் அறிஞர்களின் ஆய்வின்படி வேற்றுச் சூழலில் வளரும் நம் பிள்ளைகளின் அறிவு மற்றும் சிறப்புத்திறன் வளர்ச்சிக்கு தாய்மொழியாம் தமிழ்மொழியைக் கற்றுக் கொடுத்தல்.
மொழிப்பயிற்சி மூலம் மொழிபெயர்ப்பு ஆற்றலையும், இரட்டைமொழி அறிவையும் அதற்கமைவான சிந்தனை ஆற்றலையும் ஏற்படுத்துதல்.
பல்வேறு மொழிச் சூழலில் உலகில் வாழும் நம்மவர்களிடையே பொதுவான உறவாடல் மொழியாகத் தமிழ்மொழியை முன்னிறுத்தல்.
நம் தலைமுறையினர் ஒன்றுபட்டு எதிர்காலத்தில் மதிப்புள்ள குடிமக்களாக வாழ வழிகாட்டல்.
நம்மால் தொடரப்படும் பணிகளை நம் தலைமுறையினர் பொறுப்பேற்று செயற்பட வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
புலம் பெயர்ந்து வாழும் ஏனைய குமுகங்களுடன் இணைந்து வாழும் முறைமையை ஏற்படுத்தல்.
கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை நம் அடுத்த தலைமுறையினருக்கு ஊட்டுதல்.
தமிழ்மொழிப் பொதுத்தேர்விலும், பிரெஞ்சு உயர்கல்வித் தமிழ்த்தேர்விலும் (BAC) தமிழ்க்கலைத் தேர்விலும் தேர்ச்சி பெற பயிற்றுவித்தல்.