இந்த இணையத்தளம் புத்துருவாக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதனால், இதில் பல பகுதிகள் முழுமையற்றனவாய் உள்ளன. புத்துருவாக்கப் பணிகள் விரைவில் நிறைவடையும்.

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் - பிரான்சு

ASSOCIATION TAMOULCHOLAI - FRANCE

பிரான்சில் வளரும் எம் இளந்தலைமுறையினரைத் தமிழோடும் தமிழ்க் கலைகளோடும் தமிழ்ப்பண்பாட்டோடும் இணைக்கும் கல்விசார் அமைப்பு

எதிர்வரும் நிகழ்வுகள்
Section Header

வளர்தமிழ்-12 மாணவர் செயலமர்வு


🎯 நோக்கமும் நிறைவும் : 


தமிழ்ச்சோலைகளில் தமிழ் பயின்று  வளர்தமிழ்-12 ஐ நிறைவு செய்து செல்லும் மாணவர்களுடனான ஒரு சந்திப்பாகவும், தொடர்ந்து தமிழ்மொழிசார்  இயங்கு நிலையைப் பேணும் நோக்கோடும், மாணவர்களை  தேர்வுகளுக்கு அணியஞ்செய்யும் வகையிலும் ஆண்டுதோறும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் செயலமர்வு நடத்தப்படுகிறது.


அமைப்பு முறை : 


வளர்தமிழ்-12 பாடப்பரப்புச்  சார்ந்து எமது மொழி, பண்பாடு, வாழ்வியல், வளம், வரலாறு தொடர்பான கருத்தரங்காகவும் மாணவர் எண்ணச் சிதறல்களுக்கு வழிசமைக்கும் நிகழ்வாகவும்  இச்செயலமர்வு அமைக்கப்பட்டிருக்கும். 


அடைவு மட்டம் : 


மொழிசார் எண்ணக்கருவுடன் கணிசமான இளையோர் இசைந்தும் இணைந்தும் பயணிக்க இச்செயலமர்வு வழிசமைத்து வருகின்றது.