இந்த இணையத்தளம் புத்துருவாக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதனால், இதில் பல பகுதிகள் முழுமையற்றனவாய் உள்ளன. புத்துருவாக்கப் பணிகள் விரைவில் நிறைவடையும்.

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் - பிரான்சு

ASSOCIATION TAMOULCHOLAI - FRANCE

பிரான்சில் வளரும் எம் இளந்தலைமுறையினரைத் தமிழோடும் தமிழ்க் கலைகளோடும் தமிழ்ப்பண்பாட்டோடும் இணைக்கும் கல்விசார் அமைப்பு

எதிர்வரும் நிகழ்வுகள்

வளர்தமிழ்-12 மாணவர் செயலமர்வு 2026

வளர்தமிழ்-12 மாணவர் செயலமர்வு 2026

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் வளர்தமிழ்-12 மாணவர்களுக்கான பயிலரங்கு 05-04-2026 இல்  திறான்சி (DRANCY) நகரில் நடைபெற்றது. இப்பயிலரங்கில் 70 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டு பயனடைந்தனர். 


தமிழ்மொழிப் பொதுத்தேர்வு -2026 இற்கான அணியமாகவும் மாணவர்களின் எதிர்காலக் கல்வித்திட்டங்களுக்கான ஒரு கருத்துப்பதிவாகவும் இப்பயிலரங்கு  நடைபெற்றது. 


காலை  09.31 க்கு அகவணக்கத்துடன் தொடங்கிய பயிலரங்கு வரலாறு, மொழி, அறிவியல், இலக்கியம், இலக்கணம் தொடர்பான பயிற்சிப்பட்டறையாக அமைந்திருந்தது.  


மாணவர்களின் பட்டறிவுப்  பதிவுவைத் தொடர்ந்து குழுப்புகைப்படம் எடுக்கப்பட்டு  தமிழ்மொழி வாழ்த்துடன் 14.20 மணியளவில் இப்பயிலரங்கு நிறைவுற்றது.