திருக்குறள் திறன் போட்டிகள்-2026 இன் இறுதிப் போட்டிகள் இன்று 01-11-2026 இல் LE BLANC-MESNIL (லூ புளோ-மெனில்) நகரில் மிகச் சிறப்புற நடந்தேறியது.
கடந்த 18-10-2026 இல் நடைபெற்ற இல்-து-பிரான்சு தமிழ்ச்சோலைகளுக்கான திணைக்களமட்டத்திலான போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்றவர்களும், வெளி மாகாணங்களில் இயங்கும் தமிழ்ச்சோலைகளில் தமிழ்ச்சோலை மட்டத்திலான போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களுமாக மொத்தம் 81 மாணவர்கள் இவ்விறுதிப் போட்டிகளில் பங்கேற்றனர்.
போட்டி அமர்வுகள் விபரம்
பிரிவுகள்: மழலையர், சிறுவர், கீழ், நடுவண் மற்றும் மீநடுவண் பிரிவுகள்.
பிரிவுகள்: மேல், மீமேல், உயர் மற்றும் மீயுயர் பிரிவுகள்.
போட்டி நடுவர் பெருமக்கள்
இறுதிப் போட்டிகளில் நடுவர்களாகப் பங்கேற்று நடுநிலைமையுடன் மாணவச் செல்வங்களின் திறமைகளை மதிப்பிட்ட நடுவர்கள்:
வெற்றிக் கேடயங்கள் & சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு
இன்றைய போட்டிகளில் முதல் மூன்று இடங்களினைப் பெற்றவர்களுக்கான வெற்றிக் கேடயங்களும் சான்றிதழ்களும், இறுதிப் போட்டிகளில் பங்குபற்றிய அனைவருக்குமான பதக்கங்களும் சான்றிதழ்களும் எதிர்வரும் 19-12-2026 இல் நடைபெறும் 28வது தமிழ்ச்சோலை முத்தமிழ் விழாவில் மேடையில் வழங்கி கௌரவிக்கப்படும்.
இறுதிப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களினைப் பெற்றவர்களின் தகவல்கள், 28வது தமிழ்ச்சோலை முத்தமிழ் விழாச் சிறப்பு மலரிலும் பதிவிடப்படும்.
தமிழ்ச்சோலை மட்ட, திணைக்கள மட்ட, இறுதிப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்குபற்றிய அனைத்து மாணவச் செல்வங்களையும் அவர்களை வழிகாட்டி நெறிப்படுத்திய தமிழ்ச்சோலை நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்களையும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் மனதாரப் பாராட்டி மகிழ்கின்றது.
நன்றி
திருக்குறள் திறன் போட்டிகள்-2026 இனை திட்டமிட்டு, ஒழுங்கமைத்து நெறிப்படுத்திய போட்டி அமைப்புக் குழுவிற்கும், அனைத்து மட்டங்களிலான திருக்குறள் திறன் போட்டிகளிலும் நடுவர்களாகப் பங்கேற்றவர்களுக்கும், திணைக்கள மட்டத்திலான போட்டிகளுக்கான மண்டபத்தினைப் பெற்றுத் தந்து உதவிய நுவாசியல் (NOISIEL) தமிழ்சங்கத்திற்கும், இன்றைய இறுதிப் போட்டிகளுக்கான மண்டபத்தினைத் தந்து உதவிய LE BLANC-MESNIL (லூ புளோ-மெனில்) நகர சபைக்கும், திணைக்களமட்ட மற்றும் இறுதிப் போட்டிகளைத் திறம்பட ஒழுங்கமைத்து நடாத்திய தமிழியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கும், போட்டிகள் இனிதே நடைபெற அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
"உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து"
இறுதிப்போட்டி வெற்றியாளர் விபரம்
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற வெற்றியாளர்கள்