திருக்குறள் திறன் போட்டிகள் – 2026
இல்-து-பிரான்சு திணைக்கள மட்டப் போட்டி முடிவுகள் வெளியீடு
வணக்கம்!
திருக்குறள் திறன் போட்டிகள்-2026 இன், இல்-து-பிரான்சு தமிழ்ச்சோலைகளுக்கான திணைக்கள மட்டத்திலான திருக்குறள் திறன் போட்டிகளின் முடிவுகளை இத்துடன் மகிழ்ச்சியுடன் இணைத்துப் பகிர்கின்றோம்.
மாணவர்கள் & பெற்றோர்கள்
போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற அனைத்து மாணவச் செல்வங்கள், அவர்களை வழிநடத்திய தமிழ்ச்சோலை நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்.
நடுவர்கள் & ஒருங்கிணைப்பாளர்கள்
நடுவர்களாகச் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியப் பெருந்தகைகளுக்கும், போட்டிகளை நேர்த்தியாக வழிநடத்திய தமிழியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் நன்றி பகிர்கின்றது.
சிறப்பு நன்றி: நுவாசியல் (Noisiel) தமிழ்ச் சங்கம்
இன்றைய போட்டிகளுக்கான மண்டபத்தினை ஏற்பாடு செய்துதந்து, ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அனைத்துவழிகளிலும் ஒத்துழைப்பு நல்கிய நுவாசியல் (Noisiel) தமிழ்ச் சங்கத்தினரின் கரங்களைத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் நன்றியுடன் பற்றிக் கொள்கின்றது.
இறுதிப் போட்டிகள் பற்றிய அறிவித்தல்
இறுதிப் போட்டிகள் எதிர்வரும் 01-11-2026 ஞாயிறன்று சிறப்பாக நடைபெறும்.
இறுதிப் போட்டிகளும் சிறப்பாக நடைபெற அனைவரினதும் ஒத்துழைப்பினை நாடிநிற்கிறோம்.
"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது"
திணைக்களமட்டத் திருக்குறள் திறன் போட்டிகள் – 2026
வட்டார நிலை வெற்றியாளர்களின் திணைக்கள மற்றும் பிரிவு வாரியான முடிவுகள்